Posts filed under 'ஆவணப்படங்கள்'

நடையால் வென்ற உலகம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்  எழுதிய ”நடையால் வென்ற உலகம்”  என்ற பதிவைப் படித்து விட்டு சில தினங்கள் உறக்கமற்று அலைந்து கொண்டிருந்தேன்.

தன்னம்பிக்கையையும், மனித நேயத்தையும், சூழலியலையும் ஒருங்கே வலியுறுத்தும் வெகு அற்புதமான பதிவு அது.

அப்பதிவு சதிஷ்குமார் என்ற ஒரு (அ)சாதாரண மனிதரைப் பற்றியது. படித்து விட்டு அவரைப் பற்றி இணையத்தில் தேடிய போது SATISH KUMAR -The RADIANT SEED by Teone Reinthal என்ற ஒர் ஆவணப் படம் சிக்கியது.

அந்த ஆவணப் படம் இதோ உங்களின் பார்வைக்கு


-

இப்படத்திற்கு எஸ்.ரா வின் விமர்சனம்

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார்.

முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

(மேலும்…)

2 comments அக்டோபர் 19, 2009

இந்தியாவில் பிரபாகரன்…

இந்தியாவில் பிரபாகரன் 1980களில்…

1 comment செப்டம்பர் 18, 2009

என்ன பிழை செய்தோமடித் தாயே…

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம் – நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது.

2 comments மார்ச் 7, 2009

பெண் சிசு கொலை- ஆவணப்படம்

1 comment பெப்ரவரி 8, 2009

செக்கடிக்குப்பம் ‘பகுத்தறிவு – பெரியாரிய கிராமம்’

பகுதி – 1

பகுதி – 2

சில தொழிற்நுட்ப காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால்

பகுதி – 2 விரைவில் சரிசெய்யப்படும்


பகுதி – 3

-

பகுதி – 4

—————

இந்த காணொளிப்பதிவை கண்ட உங்கள் அனைவருக்கும் இந்த ஊரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

இப் பகுதறிவூருக்கு ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’ என்ற ஆர்குட் குழுமம் இந்த ஊர் பள்ளிக்கு மேற்கூரை அமைக்க  ’ஒரு லட்ச ரூபாய்’ கொடுக்க முடிவு செய்துதுள்ளது.


இக்கிராமத்தை இவ்வீடியோவில் காணும் பகுத்தறிவுள்ள, தமிழ் மீது காதலுள்ள அனைவரும் இவர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளலாம்.

இப்பணியில் உங்களையையும் இணைத்துக்கொள்ள
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5260318013923916716&na=1&nst=1

(உலகத் தமிழ் மக்கள் அரங்கம் ஏற்கனவே பல்வேறு நலப்பணிகளை தோழமைகளின் துணையோடு செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

செக்கடிக்குப்பம் பற்றிய மேலும் விபரம் அறிய

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5254158644274396076&kw

1 comment டிசம்பர் 24, 2008

தீண்டத்தகாத நாடு – ஆவணப்படம்

India’s Open Secret Casteism; Racism & more The film focus on Tamil Nadu & southern parts. “There is a no nation of Indians in the real sense of the world; it is yet to be created. How can people divided into thousands of castes be a nation?” — Dr B R Ambedkar “How long shall we continue to deny equality in our social and economic life? If we continue to deny it for long, we will do so only by putting political democracy in peril

1 comment அக்டோபர் 26, 2008

கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்

-

Add comment அக்டோபர் 26, 2008


அண்மைய இடுகைகள்

தொகுப்புகள்

வகைகள்

Top Posts

Blog Stats

RSS Kankavar Blog

Blogroll

ஓடைகள்

Tweet !