என்ன பிழை செய்தோமடித் தாயே…

மார்ச் 7, 2009 at 7:58 முப 2 பின்னூட்டங்கள்

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம் – நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது.

Advertisements

Entry filed under: ஆவணப்படங்கள், ஈழம், விழிப்புணர்வு.

சச்சின் டெண்டுல்கரின் முதல் பேட்டி இசையை பற்றி ராஜாவும் , ராஜாவைப் பற்றி ரகுமானும்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vishnu  |  12:56 பிப இல் மார்ச் 7, 2009

    Hi! It’s really a heart touching song. I would like to know who wrote this lyrics? Even in the TV program also I can not find the lyricist name.

    மறுமொழி
  • 2. periyarpithan  |  4:47 பிப இல் மார்ச் 7, 2009

    அய்யா! மக்கள் தொலைக்காட்சியில் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் இப்பாடலை எப்படியாவது பதிவிறக்கம் செய்ய மாட்டோமா? என ஏங்கினேன்.அந்த குறையை தங்கள் தளம் தீர்த்துவிட்டது.நன்றி. இதை எனது http://muzhangu.wordpress.com/ ல் வெளியிடுகிறேன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

  • 211,293 hits

Feeds

Tweet !

  • அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு…: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s4YL5H 5 years ago
  • Pappappa Vettai Song – வேட்டை: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s2nkiO 5 years ago
  • Why this Kolaveri di ? – ஏன் இந்த கொலைவெறி: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/rK309m 5 years ago
  • அண்ணா நூலகத்தை மாற்றுவதா ?:   source : periyar webvision Share this:StumbleUponDiggRedditLike this:Be the first... bit.ly/s89LHI 5 years ago
  • விண்டோஸ் (7) செவனும் ஏ.ஆர்.ரகுமானும்: விண்டோஸ் 7 ல் இலவச இணைப்பாக வரும் சாம்பில் பாடலையும் காப்பி அடித்துள்ள நமத... http://bit.ly/o68mCm 5 years ago

%d bloggers like this: